search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் தின விழா"

    • பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருது வழங்கி பாராட்டினார்.
    • மகளிர் காவல் நிலைய போலீசார் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காவல்துறை சார்பில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருது வழங்கி பாராட்டினார்.

    தொடர்ந்து கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மகளிர் காவலர்கள் பங்கேற்று சினிமா பாடலுக்கு நடனமாடினர். மேலும் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி மற்றும் பெண் காவலர்கள் சின்ன கவுண்டர் படத்தில் இடம் பெற்ற முத்துமணி மாலை பாடலை மேடையில் பாடி அசத்தினர். இதில் கோவில்பட்டி மேற்கு, கிழக்கு, நாலாட்டின்புதூர், கழுகுமலை, கயத்தார் காவல் நிலையங்களை சேர்ந்த பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.

    • உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
    • வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த பெண்கள் அனுபவங்களை விளக்கினர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உலக மகளிர் தின விழா நடந்தது.

    மானாமதுரை செர்டு சமூக சேவை நிறுவனத்தின் சார்பில் நடந்த விழாவையொட்டி மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் பங்கேற்ற பேரணி நடந்தது. திருப்புவனம் புதூர் பகுதியில் இருந்து தொடங்கிய பேரணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.

    காவல்துறை சார்பு ஆய்வாளர் பாண்டீசுவரி பேரணியை தொடங்கி வைத்தார். நரிக்குடி சாலையில் பேரணி நிறைவடைந்தது. அதன் பின்னர் நடந்த விழாவில் செர்டு சமூக சேவை நிறுவன இயக்குநர் எல்.பாண்டி வரவேற்றார்.

    ஒருங்கிணைப்பாளர் போதும்பொண்ணு, சார்பு ஆய்வாளர் பாண்டீசுவரி உள்ளிட்ட மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் பேசினர். வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த பெண்கள் அனுபவங்களை விளக்கினர். அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • குழு நடனம், விழிப்புணர்வு பாடல் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
    • கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்கள் மற்றும் விளையாட்டு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    சென்னை:

    சென்னை பேசின் பிரிட்ஜ் டான் பாஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் குழு நடனம், விழிப்புணர்வு பாடல் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

    அருட்தந்தை அல்போன்ஸ் வரவேற்புரையாற்றி வாழத்துரை வழங்கினார். சென்னை மாநராட்சி மேயர் பிரியா, தாயகம் கவி எம்எல்ஏ, தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவின் ஷீலு பிரான்சிஸ், மாமன்ற உறுப்பினர் சரவணன், டான் பாஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் லீமா ரோஸ், டாக்டர் தமிழரசி சிவகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்கள், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • சர்வதேச மகளிர் தின விழா கிறிஸ்துபாளையம் ஜான் பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.
    • இந்த விழா ஆயர் லாரன்ஸ் பயஸ், தலைமையில் நடந்தது.

    தருமபுரி,

    தருமபுரி சமூக சேவை சங்கம், காரிதாஸ் இந்தியா, கோல்பிங் இந்தியா, தமிழக சமூகப்பணி மையம், தமிழக பெண்கள் கூட்டமைப்பு, கிறிஸ்துபாளையம், ஜான் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி மற்றும் சேலம், மூவேந்தர் கலைக்குழு இணைந்து, சர்வதேச மகளிர் தின விழா கிறிஸ்துபாளையம் ஜான் பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.

    இந்த விழா ஆயர் லாரன்ஸ் பயஸ், தலைமையில் நடந்தது. மதர் ஆஞ்சலா, தாளாளர் ஜான் போஸ்கோ பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஓசூர், முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களை தருமபுரி சமூக சேவை சங்கத்தின் இயக்குநர் ஜேசுதாஸ் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

    விழாவில் திருச்சி தமிழக சமூகப்பணி மைய இயக்குநர் ஆல்பர்ட் தம்பிதுரை, ஆனி ஜாய்ஸ், லூர்துசாமி, ஸ்டீபன் சொரூபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கு முன்னதாக மதர் ஆஞ்சலா பச்சை வண்ண கொடியை அசைத்து புற்றுநோய் மற்றும் இதயம் காப்போம் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.

    ஜேசுதாஸ் விழிப்புணர்வு சார்பான முழக்கங்கள் எழுப்பி பேரணியை வழிநடத்தி சென்றார்.

    இவ்விழிப்புணர்வு பேரணியில் விழாவிற்கு வருகை புரிந்த அனைவரும் கலந்துகொண்டு தங்கள் கைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் முழக்கங்கள் எழுப்பியும் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்றனர்.

    விழாவில் சுயஉதவிக் குழுக்களின் உறுப்பினர்கள், மாவட்ட கூட்டமைப்பு பொறுப்பாளர்கள், மூவேந்தர் கலைக்குழு மற்றும் ஜான் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியின் மாணவிகள், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் என 900-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான எல்லா ஏற்பாடுகளையும் தருமபுரி சமூக சேவை சங்கத்தின் இயக்குநர் ஜேசுதாஸ், ஜான் பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர், லூர்துசாமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • கல்லூரி தலைவர் வள்ளி பெருமாள் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
    • ஆயுதங்களாக கொண்டு தடைக்கற்களை படிக்கட்டுகளாக மாற்றி வெற்றி கொடி நநாட்ட வேண்டும்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

    இதற்கு தாளாளர் பெருமாள் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் வள்ளி பெருமாள் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம், பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கலை கல்லூரி முதல்வர் ஆறுமுகம் விழாவில் தொடக்க உரையாற்றினார். அவர் பேசும் போது பெண்கள் நன்கு கல்வி கற்று, தனித்திறன் வளர்க்கும் பயிற்சி பெற்றவளாக தேர்வில் தேர்வாகி உலகம் வியக்கும் உன்னத பெண்களாக உருவாக வேண்டும் என வாழ்த்தினார்.

    விழாவில் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை கல்லூரி முதல்வர் அனுராதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    சிறப்பு விருந்தினர் பேசும்போது பெண்கள் என்றுமே வலிகளை தாங்கும் வல்லனை கொண்டவர்களாக விளங்கு கிறார்கள்.

    நவீனயுகத்தில் கல்வி, தன்னம்பிக்கை ஆகியவற்றை ஆயுதங்களாக கொண்டு தடைக்கற்களை படிக்கட்டுகளாக மாற்றி வெற்றி கொடி நநாட்ட வேண்டும் என்றார்.

    உலக அளவில் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இந்தியர்கள் இருப்பதாகவும், அதை போல மாணவிகளும் வளர வேண்டும் என்றார்.

    விழாவில் துறை தலைவர்கள், பேராசி ரியர்கள், மாணவிகள், நிர்வாக அலுவலர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெண்கள் ஒருங்கிணைந்து கேக் வெட்டி இனிப்பு வழங்கினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் பெண்கள் ஒருங்கிணைந்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் லதா முன்னிலை வகித்தார்.

    இதில் நகர மன்ற துணைத் தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ், நகராட்சி பொறியாளர் ஆசீர்வாதம், நகர மன்ற அவைத்தலைவர் துரை சீனிவாசன், நகராட்சி அலுவலர் மோகன், நகர மன்ற உறுப்பினர்கள் ராஜ்குமார், செந்தில்குமார், சாமுண்டீஸ்வரி,

    கே.எம்.பி.பாபு, சங்கீதா, கங்காதரன், ரஷீதா, நந்தா தேவி, மல்லிகா, மற்றும் நகராட்சி அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நடனம், பாட்டு, ஓவியம், பேச்சுப்போட்டி என பல பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
    • வெற்றி பெற்றவர் களுக்கு பள்ளியின் தாளாளரின் தாய் சாந்தி வேடியப்பன் பரிசுகளை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.

    மொரப்பூர்,  

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் சர்வதேச மகளிர் தின விழா மிகச்சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

    இவ்விழாவினை பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன் தலைமை ஆகியோர் தலைமை வகித்தனர்.

    பள்ளியின் தாளாளரின் தாய் சாந்தி வேடியப்பன் மற்றும் நிர்வாக இயக்குனர் பவானி தமிழ்மணி, சன்மதி ராஜாராம் ஆகியோர் கேக் வெட்டி விழாவை தொடங்கி வைத்தனர்.

    இவ்விழாவினை முன்னிட்டு நடனம், பாட்டு, ஓவியம், பேச்சுப்போட்டி என பல பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் ஆசிரியை கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    வெற்றி பெற்றவர் களுக்கு பள்ளியின் தாளாளரின் தாய் சாந்தி வேடியப்பன் பரிசுகளை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார். பின்னர் அனைவருக்கும் பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

    இவ்விழாவில் நிர்வாக இயக்குனர் தமிழ்மணி, பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ், வெற்றிவேல் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியப்பெரு மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கொண்டாடப்படுகிறது.
    • நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    பென்னாகரம்,

    ஒவ்வொரு வருடமும் மார்ச் 8-ம் தேதியன்று, "சர்வதேச மகளிர் தினம்" உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே சமத்துவத்தை ஏற்படுத்தவும், பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கொண்டாடப்படுகிறது.

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மேலும் ஒன்றிய குழு துணை தலைவர் அற்புதம் அன்பு, ஒன்றிய கவுன்சிலர்கள்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன் (வட்டார வளர்ச்சி), வடிவேலன் (கிராம ஊராட்சி ), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தாரா, சமூக நலத்துறை அலுவலர்கள் மைத்லின் மேரி, இந்திராணி மற்றும் வர்ஷினி, குணசுந்தரி , சுகன்யா, பிருந்தா மணி உள்ளிட்ட அலுவலக பணியாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சியை முன்னிட்டு அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    • ராமாபுரம் அரசு ஆரம்ப பள்ளியில் மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
    • பள்ளி மாணவிகளுக்கு பாரத பிரதமரின் செல்வமகள் திட்டத்தில் மாணவிகளின் பெயரில் முன்பதிவு தொகையை செலுத்தினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி அருகே உள்ள ராமாபுரம் அரசு ஆரம்ப பள்ளியில் மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.

    இதில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் அன்பரசன் கலந்து கொண்டு இனிப்பு களை வழங்கினார்.

    மேலும் பள்ளி மாணவிகளுக்கு பாரத பிரதமரின் செல்வமகள் திட்டத்தில் மாணவிகளின் பெயரில் முன்பதிவு தொகையை செலுத்தினார்.

    மேலும் அஞ்சல் சேமிப்பு கணக்கை தொடங்கி அட்டைகளை வழங்கினார். மேலும் பொதுமக்களுக்கு சேமிப்பு திட்டத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • பாரம்பரிய அரிசி, சிறுதானியங்களை மதிப்பு கூட்டி தரும்போது லாபகரமாக செய்ய முடிகிறது.
    • இந்த 2023 வருடத்தை சிறுதானிய உணவுகளுக்கான வருடமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    கோவை:

    உலக மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பாக கோவை பேரூர் தமிழ்க்கல்லூரியில் இன்று (8 மார்ச்) நடந்த 'வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியமே' என்ற நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

    சிறப்பு விருந்தினராக பேரூர் ஆதீனத்தின் அருள்திரு மருதாசல அடிகளார் அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில் "பேரூர் ஆதீனம் ஈஷாவுடன் இணைந்து பல வருடங்களாக பல்வேறு செயல்களை செய்து வருகிறது. சத்குரு முன்னெடுத்துள்ள பல அற்புதமான திட்டங்களில் சிறப்பானதொரு திட்டம் இந்த மண் காப்போம். இதற்காக அவர் உலகம் முழுக்க பயணித்து கோவை திரும்பியபோது பேரூர் ஆதீனம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மண் காப்போம் இயக்கத்தின் இந்த நிகழ்ச்சி மகளிருக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்க வழிகாட்டும் சிறப்பான நிகழ்வாக அமைந்திருக்கிறது" என்று கூறி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    திட்ட விளக்க உரை வழங்கிய மண் காப்போம் இயக்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா பேசுகையில், "ஈஷா மண் காப்போம் இயக்கம் கடந்த 25 வருடங்களாக மண் வள மேம்பாடு, அதன் மூலம் மனித ஆரோக்கியம், விவசாயிகள் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றிற்காக பல்வேறு செயல்கள் செய்து வருகிறது.

    பெண்களுக்கு இருக்கும் தொழில் வாய்ப்புகளை பற்றி தெரிந்துகொள்ள இந்த நிகழ்ச்சி உதவும். இது துவக்கம் தான். இதில் தங்களுக்கு திறக்கும் வாய்ப்புகள் வழியாக உங்களை வெற்றிக்கு அழைத்து செல்ல விரும்புகிறோம்" என்றார்.

    மண்வாசனை நிறுவனத்தின் மேனகா பேசுகையில், தினமும் மூன்று வேளை சமைப்பதையே பலரும் வாழ்வின் இலக்காக வைத்து ஓடிக்கொண்டே இருக்கிறோம். நாங்கள் 20 வருடங்களுக்கு முன்பு நம்மாழ்வார் அய்யா அவர்களை சந்தித்தோம். நீங்கள் சொல்வதை செய்ய விரும்புகிறோம். ஆனால் வாழ்வாதாரம் பற்றி உள்ள பயத்தை அவரிடம் சொன்னோம். அதற்கு அவர், 'உங்கள் வாழ்வாதாரத்தை இயற்கை பார்த்துக் கொள்ளும்' என்றார். அந்த ஒரு வார்த்தை எங்களை இன்று வரை நகர்த்துகிறது.

    பாரம்பரிய அரிசி, சிறுதானியங்களை நேரடியாக தரும்போது உட்கொள்ள சிரமப்படுகிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு, மதிப்பு கூட்டி தரும்போது லாபகரமாக செய்ய முடிகிறது.

    இந்த 2023 வருடத்தை சிறுதானிய உணவுகளுக்கான வருடமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்தளவிற்கு சிறுதானிய உணவுகளுக்கான அதிமுக்கியமான தேவை உள்ளது, என்றார்.

    அவரைத்தொடர்ந்து மாடித்தோட்ட பயிற்சியாளரும் தமிழ்நாடு பாரம்பரிய விதை சேகரிப்பு குழுவைச் சார்ந்தவருமான திருமதி. பிரியா ராஜ்நாராயணன், தேனீ வளர்ப்பில் பல்வேறு சாதனைகள் புரிந்து இந்திய மற்றும் தமிழக அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள ஜோஸ்பின் மேரி, நாட்டு மாடுகளை பேணிக் காத்து அதிலிருந்து நிலையான வருமானம் பெற முடியும் என்று சாதித்துக் காட்டிய முனைவர் யமுனாதேவி ஆகியோரும் பல்வேறு தொழில் வாய்ப்புகள் பற்றி சிறப்புரை ஆற்றினர்.

    மேலும் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பாரம்பரிய உணவு பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெற்றது.

    பங்கேற்பாளர்களின் சந்தேகங்களை தீர்க்கும் விதமாக கேள்வி பதில் பகுதியும் நடந்தது. இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளில் சாதித்த சாதனை பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    • லதா நாராயணன் குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார்.
    • தண்டையார்பேட்டை பாப்பாத்தி டிராவல்ஸ் வளாகத்தில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் கல்பனா தலைமையில் நடக்கிறது.

    திருவொற்றியூர்:

    சமத்துவ மக்கள் கழகம் சார்பில் உலக மகளிர் தின விழா இன்று மாலை 5 மணிக்கு தண்டையார்பேட்டை பாப்பாத்தி டிராவல்ஸ் வளாகத்தில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் கல்பனா தலைமையில் நடக்கிறது.

    லதா நாராயணன் குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக பேராசிரியர் ஜெயஸ்ரீ, எழுத்தாளர் லதா சரவணன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளை தலைவர் எர்ணாவூர் நாராயணன் வழங்குகிறார்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை வட சென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளர் குணசுந்தரி, மாநில நிர்வாகிகள் மீனா, ஆனந்தி, விஜயலட்சுமி, கல்யாணி, வர்ஷா, லெசி, அனிதா, ராஜ புஷ்பம், இளங்காவதி ஆகியோர் செய்துள்ளனர்.

    • பட்டிமன்றம், ஆடல், பாடல் மற்றும் சிலம்பம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
    • துபாய் ஈமான் கலாசார மையத்தின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    துபாய்:

    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு துபாய் புள்ளைங்கோ சார்பில் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. துபாய் அல்-கீஸஸ் பகுதியில் அமைந்துள்ள கேப்பிட்டல் ஸ்கூலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஷாநவாஸ் மற்றும் அய்யாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இந்த நிகழ்ச்சியின் துவக்கமாக தமிழக பரம்பரியத்தை போற்றும் வகையில் பெண்கள் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

    இதில் பட்டிமன்றம், ஆடல், பாடல் மற்றும் சிலம்பம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக துபாய் ஈமான் கலாசார மையத்தின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், ரேடியோ கில்லி மற்றும் BM குரூப்ஸ் மேலாளர் உமர், TAM குரூப் ஆப் கம்பெனி நிறுவனர் ஷனவாஸ், IBG குழுமத்தின் நிர்வாகி ராஜா, காட்டு பசி உரிமையாளர் தமிழரசி மற்றும் அசோக், மதுரை பிரியாணி உரிமையாளர் பாலு மற்றும் ஜமுனா, SALWA நிறுவன உரிமையாளர் ரவி, செய்தியாளர் அஸ்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் அமீரகத்தில் வாழ் சிறந்த தமிழ் பெண்களுக்கு கௌரவப்படுத்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியினை சுஜி மற்றும் ஹரிணி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை துபாய் புள்ளைங்கோ பெர்மி, ஜெனனி, அருணா மற்றும் குழுவினர் செய்திருந்தனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    ×